Home இரகசியகேள்வி-பதில் இது உன்னையே சிதைத்துக் கொள்ளும் விஷயம்!

இது உன்னையே சிதைத்துக் கொள்ளும் விஷயம்!

25

வெகு நாட்களாக என் பிரச்னை பற்றி உனக்கு கடிதம் எழுதவேண்டும் என்று நினைத்தேன். ஆனால், என் பிரச்னை கேலிக்குரியது… தயவு செய்து தப்பாக நினைக்காதே… என் வரையில் என் பிரச்னை அதி தீவிரமானது. உடனே தீர்வடையாவிட்டால் எனக்குப் பைத்தியமே பிடித்து விடும் போலி ருக்கிறது. விஷயம் இதுதான்:
எனக்கு, 17 வயதில் திருமணம். கூட்டுக் குடும்பம். புகுந்த வீடு மிகவு ம் ஆச்சாரமானது. 18ல் தொடங்கி; வரிசையாய் நாலு குழந்தைகள். கணவருக்கு நான் தேவையாக இருக்கும் போதெல்லாம் ஒன்று பிர சவித்திருப்பேன், இல்லாவிட்டால், சுத்தபத்தமாய் குளித்து முடித்து சமைத்துக் கொண்டிருப்பேன். இருந்தது ஒரு ஹால், ஒரு படுக்கை யறை…
இரவு, 11:00 மணிக்கு மேல், மாமியார் அனுமதி கொடுத்ததும் தான் படுக்கையறைக்குள்ளேயே அடியெடுத்து வைக்க வேண்டும். அப் போது பார்த்து குழந்தை அழுது ஊரைக் கூட்டும். என் கணவருக்கு கோபமாய்வரும். “சனியனை எடுத்துட்டு வெளியிலப்போய் தொ லை…’ என்று கத்துவார்.
இப்படியே, என், 35 வயது வரை காலம் ஓடி விட்டது.
என் கணவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைத்தது. வருடத்துக் கு ஒருமுறைதான் வருவார். நான்தான் குழந்தைகளைப் படி க்க வைத்து, மாமியாரையும் கவ னித்துக் கொண்டு இருந்தேன்.
சிலவருடங்களுக்குப்பின் மாமனார், மாமியார் காலமாயினர். நாலு குழந்தைகளில் இரண்டு பேருக்கு திருமணமாகி, வெளியூரில் இரு க்கின்றனர். இரண்டு பேர் வெளிநாட்டில் படிக்கின்றனர். இப்போது என் கணவர் ஓய்வு பெற்று வீட்டோடு இருக்கிறார்.
ஒருசில கம்பெனிகளில் டைரக்டராக இருக்கிறார். கை நிறைய பணம்.. தேவையானதை வாங்கலாம். அவர் என்னை ஒருநாளும் கட்டுப்படுத்தியதே இல்லை. 45ல் மாதவிலக்கு நின்றது. அப்போதெ ல்லாம் என்னுள் தாங்க முடியாத, “செக்சுவல் அர்ஜ்’ இருந்தது. என் கோபத்தையும், அழுகையையும் வெளிக்காட்ட யாருமே இல்லாத தால், எனக்குள் வைத்தே மறுகிப் போனேன்.
இப்போது கடந்த மூன்று வருடங்களாகத்தான் இவர் என்னுடன் இரு க்கிறார். அவரைப் பொறுத்தவரையில், காலையில் பூஜை, கோவி ல். மாலையில் கிளப், பைவ் ஸ்டார் ஓட்டல்களில் பிசினஸ் பார்ட்டி … இப்படி போய் கொண்டிருக்கிறது!
நாற்பத்தியைந்து வயதில் நான் நினைத்ததுண்டு… விடிகாலையில் எங்கிருந்தாவது ஒரு தேவகுமாரன் வந்து, என் தாபத்தை தீர்த்து விட்டு போக மாட்டானா என்று!
இப்போது ஐம்பதிலும் என் மனம் இளமையாக இருக்கிறது… கணவ ருடன் சேர்ந்து படுப்பதுதான் இல் லை என்றாலும், அவரது அன்பான சொல், அரவணைப்பு, “இத்தனை நாளும் எப்படியெல்லாம் கஷ்டப் பட்டாய்’ என்கிற பரிவான விசாரிப் பு. இது கிடைத்தால் போதும். ஆனால், அவரோ இதை ஒரு நாளும் பொருட்படுத்தியது இல் லை.
நீயே சொல்… இவர், இவரது, இளமைப் பருவத்தில் எங்கெங்கு இரு ந்தாரோ, அங்கெல்லாம் தேவைப்பட்ட போது தன் உடற்பசியைத் தீர் த்துக்கொண்டிருக்கிறார்… இது பற்றி நண்பர்களுடன் சிரித்து பேசும் போதெல்லாம் தமாஷாகக் கூறி, என்னைப்பார்த்து கண் சிமிட்டுவா ர்…
இப்பக்கூட என் மன உளைச்சல் தாங்காமல் எல்லார்கிட்டேயும் எரிந்து விழுகிறேன். வீட்டில் நிம்மதியே இல்லை. என் கணவரைப் பார்க்கும் போது மட்டுமில்லை, அவர் சம்பந்தப்பட்ட சட்டை, செருப் பு, வாட்ச் எதைப்பார்த்தாலும் நார் நாராகக் கிழித்து, தூக்கிப்போட்டு உடைக்க வேண்டும் போல் இருக்கிறது.
என் பிரச்னைக்கு நீதான் பதில் தர வேண்டும்.
இப்படிக்கு
— அன்பு சகோதரி.
அன்பு சகோதரிக்கு—
தேவையானபோது, “செக்ஸ்’ வைத்துக் கொள்ள முடியாமல், பிறகு அதற்கு சமயமும், சந்தர்ப்பமும் கிடைக்கும்போது, ஒரே வீட்டில், இருவேறு படுக்கையறையில் படுத்திருக்கும் அவலம் கஷ்டமானது தான்; புரிகிறது.
ஐம்பது வயதானாலும் மனசை பொறுத்த வரையில் இளமையாக வே இருப்பதாகவே எழுதியிருக்கிறாய்.
முதலில் என் பாராட்டுகள். இந்த காலத்தில் ஒரு பிள்ளை பெற்று, 25 வயசு முடிவதற்குள்ளாகவே எல்லாம் முடிந்துவிட்டதாக நினைத் து, பெண்கள், தங்களை கவனித்துக் கொள்ளாமல், “புஸ்’ சென்று உப்பியோ, குச்சியாய் இளைத்தோ போகின்றனர்.
பல ஆண்பிள்ளைகளுக்கு பெண்ணின் மனசைப் படித்தறியும் சமர்த் துப் போதாது. தனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்று தேடித் தேடி போவரே தவிர, தாலி கட்டியவளுக்கு எது வேண்டும் என்று கேட்கத் தெரியாது. அப்பேர்ப்பட்ட புத்திசாலிகளுக்கு, நாம்தான் நம் தேவையைக் கோடிட்டு காட்ட வேண்டும்.
பிறந்த நாள், திருமண நாள் என்றால், பரஸ்பரம் வாழ்த்து அட்டை அனுப்பி, குழந்தைகளுடன் சேர்ந்து ஒரு அட்டை என்றால், தனியாக -அந்தரங்கமாக, மெல்லிய, கிளர்ச்சியூட்டும் வார்த்தைகளுடன் இன் னொரு வாழ்த்து அட்டையை அனுப்பி, உங்களது கட்டில் உறவை சாகாமல் வைத்திருக்கலாமே!
“அவர் வரையில் அவர் எல்லாவற்றையும் அனுபவித்து விட்டார்… இனி மேல் அவருக்கு எதுவும் தேவையில்லை. என்னையும் அப்படி யே நினைக்கிறார்…’ என எழுதியிருக்கிறாய்.
உனக்கு எதுவும் தேவையில்லை என்பதை அவர் அறிந்து கொண்ட து எப்படி? உன் நடையுடை பாவனை, விட்டேற்றியானப் பேச்சு, எரிச் சலில் வீட்டு வேலைக்காரிகளிடம் கத்துவது, அவரது சினேகிதர்க ளைக் கண்டால் முகத்தைத் தூக்கி வைத்துக் கொள்வது… இப்படித் தானே!
என்றோ வெளிநாட்டில் பழகிய பெண்கள் அவரது மனசில் இடம் பிடித்திருக்கின்றனர் என்றால், உன்னால் அது முடியாதா?
“இத்தனை வயசுக்கு மேல் புருஷனை மயக்கித்தான் இல்லறம் நட த்த வேண்டுமா…’ என்று கேட்டால், என்னைப் பொறுத்தவரையில், அவசியமில்லை என்று தான் நான் சொல்வேன். காரணம், அது என் னுடைய மனப்பாங்கு. “போடா’ என்று ஒரு நிமிஷத்தில் உதறிவிட்டு போய்விடலாம் – நானாக இருந்தால்.
ஆனால், இது உன்னைப் பொறுத்த விஷயம், உனக்கு கணவனின் அன்பும், அரவணைப்பும் தேவை. இல்லாவிட்டால் அவள், புருஷனி ன் சட்டையைக் கிழிப்பாள்; வாட்ச்சை உடைப்பாள்; டைஜின் மருந் துடன் பேதி மருந்தைக் கலந்து வைப்பாள். எப்படியோ தன் கொந்த ளிக்கும் மனசுக்கு ஒரு வடிகாலைத் தேட முயற்சிப்பாள்… அப்படி த் தானே!
ப்ளீஸ்… இது உன்னையே சிதைத்துக் கொள்ளும் விஷயம். ஒன்று செய்… உன் உடைகளில் கவனம் செலுத்து. உன் சினேகிதிகளிடம், உன் அவரை விடவும் ஜோராக, “ஜோக்’ அடித்துப் பேசு.
இன்றைய நாட்டு நடப்பிலிருந்து, சினிமா, நாட்டியம், சங்கீதம் என்று சகலத்தைப் பற்றியும், “டாப் டு பாட்டம்’ பேசக் கற்றுக் கொள். முடிந் தால், மூன்று மாதம்போல, வெளிநாட்டில் இருக்கும் பிள்ளைகளோ டு போய் இருந்து விட்டு வா.
கணவர் பூஜைக்கு உட்காரும்முன், நீ அதே சாமிப்படத்தின் முன் கண் மூடி உட்கார். அவர் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, வீட்டு நாய்குட்டியை கொஞ்சு. அவரது நண்பர்களிடம் சரளமாய் பேசு. அவர் கேட்கும்முன்பே வீட்டுக்குள்ளேயே சின்னதாய் பார்ட்டி வைத் து இன்ப அதிர்ச்சிக் கொடு.
எப்போதுமே, நீ உன்னைப் புதுப்பொலிவுடன் வைத்துக்கொள். அவர் , தன் தலையணையைத் தூக்கிக் கொண்டு, “உன் பெட்ரூமில் இன் னிக்கு நானும் படுத்துக்கலாமா…’ என்று கேட்டால், உடனே, “வித் பிளஷர்’ என்று கூறிவிடாமல், கொஞ்சம் யோசித்து, “இன்னிக்கு மட்டும்தான்’ என்று கூறு… நாளைக்கும் கேட்டால், அப்போது இன் னொரு, “இன்னிக்கு மட்டும் தான்’ என்று சொல்லிக் கொள்ளலாம்.
நீ மனசு வைத்தால் எல்லாம் நல்லதாய் நடக்கும்.