Home பெண்கள் உடல் கட்டுப்பாடு இடுப்புப் பகுதிக்கான உடற்பயிற்சி

இடுப்புப் பகுதிக்கான உடற்பயிற்சி

24

இடுப்பு-கழுத்து-அக்குள்...-கருமை-நீங்க-அருமையான-வழிகள்அனைவருக்குமே இடுப்பு பகுதியானது அழகாக இருக்க வேண்டும் ஆசை உண்டு. சிலருக்கு இடுப்பு இருக்குறதே தெரியவில்லை என்று சொல்வார்கள். அவர்கள் இந்த உடற்பயிற்சி செய்து நல்ல பயன் பெருங்கள்.
முதலில் உடற்பயிற்சி செய்யும் விரிப்பில் நேராக நிற்கவும், பிறகு இரண்டு பாதங்களும் சற்று இடைவெளி விட்டு இருக்குமாறு கால்களை வைத்துக் கொண்டு நேராக நிற்கவும்.

கைகளை இடுப்பில் வைத்துக் கொண்டு அதில் கட்டை விரல் மட்டும் முன்பக்கம் மற்றும் மற்ற விரல்கள் பின்பக்கமும் இருக்குமாறு இடுப்பை பிடிக்கவும்.

இப்பொழுது இடுப்பை வலது புறமாகவும், இடது புறமாகவும் சுற்றவும். அதாவது இடுப்பை 5 முறை வலமிருந்தும், 5 முறை இடமிருந்தும் சுற்றினால் போதும்.

இப்பயிற்சி செய்யும்போது பாதம் நன்றாக தரையில் ஊன்றி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். கால்களை நகர்த்தாமல் இடுப்பை மட்டும் வலதுபுறமாக 5 முறை சுற்றவும். பிறகு பழைய நிலைக்கு வரவும். அதே முறையில் இடது புறத்துக்கும் செய்ய வேண்டும்.

இந்தப் பயிற்சியை தொடர்ந்து செய்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆரம்பத்தில் இப்பயிற்சி செய்யும் போது சற்று வலி உண்டாகும். ஆனால் தொடர்ந்து செய்ய செய்ய இடுப்பை சுலபமாக சுற்ற முடியும் மற்றும் வலியும் ஏற்படாது.