சில பெண்களுக்கு முதுகு அகலமாக இருக்கும். தினமும் நீண்ட தூரம் நடக்க வேண்டும். நடந்தால் இவர்களுடைய முதுகின் அகலம் குறையும். முதுகு அழகாக மாறும். சில பெண்களுக்கு கன்னம் உப்பிப் போய்க் கிடக்கும். இப்படி கன்னம் பெருத்த பெண்கள் தினமும் கொஞ்ச நேரம் ஏதாவது ஒரு புத்தகத்தை எடுத்து வைத்துக் கொண்டு உரக்கப் படிக்க வேண்டும். தினமும் வெந்நீரில் உப்பைப் போட்டு கன்னங்களுக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டும். இப்படிச் செய்தால் கன்னங்கள் வலுப்பெறுகின்றன. ஊளைச் சதை குறைகிறது. கன்னத்திலுள்ள ஊளைச் சதை குறைந்துவிட்டால் அந்தக் கன்னங்களை இன்றைக்கெல்லாம் பார்த்துக் கொண்டே இருக்கலாமே!
மூக்கு பெரிதாக உள்ள பெண்கள் மூக்கின் நுனியில் கொஞ்சம் அதிகமாக மேக்கப் போட்டுக் கொள்ள வேண்டும். அப்படி போட்டுக் கொண்டால் அவர்கள் மூக்கு பார்ப்பதற்குச் சின்னதாகத் தெரியும்.
மூக்குக் கண்ணாடி அணிந்து கொண்டிருக்கும் பெண்களுக்குக் கண்களின் அழகு கொஞ்சம் குறையும் மூக்குக் கண்ணாடி அணியும் அந்தப் பெண்கள் கொஞ்சம் பட்டையாகவே தங்கள் கண் இமைகளுக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும்.
வயதான பெண்கள் அவசியம் தங்கள கண்களுக்கு மை தீட்டிக் கொள்ள வேண்டும். மை தீட்டிக் கொள்வதால் கண்களில் உள்ள வயதான தோற்றம் போகும். இளமையான தோற்றம் வரும்.
நாற்பது வயதாகிவிட்ட பெண்களும்கூட இளமையுடன் இருக்கலாம். அழகுடன் இருக்கலாம். இருக்க முடியுமா? முடியும். தினமும் ஒரு டம்ளர் ஆரஞ்சுப் பழ ஜுஸ் சாப்பிட வேண்டும். நிறையச் சாப்பிடக்கூடாது. ஸ்வீட் தயிர் பால் முட்டை நெய் வெண்ணெய் மாமிசம் தேங்காய் கிழங்கு வகைகள் சாப்பிடக்கூடாது. அடிக்கடி வெயிலில் சுற்றக் கூடாது. தினமும் காலையிலும் மாலையிலும் விரைவாக நடக்க வேண்டும்.
பெண்கள் சூடான தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி வைத்து அதிலிருந்து வரும் ஆவியைத் தங்கள் முகத்தில் படும்படிச் செய்ய வேண்டும். இப்படிச் செய்துவிட்டு முகத்தைச் சோப்புப் போட்டுக் கழுவிவிட வேண்டும். முகம் சுத்தமாகும் மிருதுவாகும் பொலிவு பெறும்.
தினமும் தலைக்குக் கொஞ்சம் எண்ணெய் தடவிவர வேண்டும். அது தேங்காய் எண்ணெய்யாக இருந்தால் நல்லது. எண்ணெய் தடவும்போது விரல்களின் நுனியால் தலையில் அழுத்திப்பிடித்துவிட்டுத் தேய்க்க வேண்டும். அப்படி செய்தால் கூந்தல் எண்ணெய்ப் பசையுடன் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். வெளியில் போகிறவர்களுக்குக் கோடைக் காலத்தில் கூந்தல் வைக்கோலைப் போல் உலர்ந்துவிடும். எவ்வளவுதான் எண்ணெய் தடவினாலும் போதாது. இப்படி இருந்தால் வாரத்திற்கு ஒரு தடவை காய்ச்சிய எண்ணெய்யைத் தலையில் நன்றாகத் தேய்த்துவிட்டு ஒரு மணி நேரம் ஊறிய பின்பு தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். ஆண்களுக்கு இது மிகவும் முக்கியம்.
காலையில் எழுந்ததும் எலுமிச்சம்பழச் சாற்றைத் தண்ணீரில் கலந்து சாப்பிடுவது நல்லது. இது இரத்தத்தில் உள்ள கழிவுப் பொருள்களை வெளிப்படுத்துகிறது. இரத்தத்தைச் சுத்தப்படுத்துகிறது. இரத்தம் சுத்தமாகிவிட்டால் உடம்பு பார்ப்பதற்கு அழகாக இருக்கும்.
புகை பிடித்தால் வெற்றிலை போட்டால் அடிக்கடி காப்பி குடித்தால் பல்லில் கறை படியும். பல்லில் கறை படிந்தால் பல் அழகு கெடும் பல் கறையைப் பல் தேய்ப்பதன் மூலம் போக்க முடியாது.
பெண்கள் வெயிலில் வெளியில் போகும்போது இருபது நிமிஷங்களுக்குமேல் தொடர்ந்து வெயிலில் இருக்கக் கூடாது. கால்மணி நேரத்துக்கு ஒரு தடவை எங்கேயாவது நிழலில் கொஞ்ச நேரம் நின்று ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டும். தொடர்ந்து வெயிலில் நின்றால் பெண்களின் அழகு கெட்டுப் போகும். முகம் கருங்கும். உடம்பின் பளபளப்பும் போய்விடும்.
அடிக்கடி குளிர்ந்த பானங்களைக் குடிப்பவர்களும் ஐஸ்கிரீம் சாப்பிடுகிறவர்களும் சாக்லேட் தின்பவர்களும் காப்பி குடிப்பவர்களும் பருமனாகி விடுகிறார்கள். உடம்பு இளைக்க வேண்டும் பெருக்க கூடாது என்று நினைக்கிறவர்கள் இவற்றையெல்லாம் தொடக்கூடாது. தள்ளிவிட வேண்டும்.
தினமும் காலையில் வெந்நீரில் ஓர் எலுமிச்சைப் பழத்தைப் பிழிய வேண்டும்; அதில் ஒரு ஸ்பூன் தேனைக் கலக்க வேண்டும்; அதைப் பருக வேண்டும். இப்படிச் சாப்பிட்டு வந்தால் அவர்கள் ஒல்லியாக இருப்பார்கள். அவர்கள் குரல் இனிமையாக இருக்கும்.