Home சூடான செய்திகள் ஆபாசக் காட்சியுள்ள படத்துக்கு ”யு” தணிக்கை சான்றிதழ்

ஆபாசக் காட்சியுள்ள படத்துக்கு ”யு” தணிக்கை சான்றிதழ்

23

மழைக்காலம் படம் நாயகி சரண்யா ஆபாசமாக நடித்ததை பற்றி கொலிவுட் பரபரப்பாக பேசி வருகிறது.
தமிழில் காதல், பேராண்மை படங்களுக்கு பிறகு படத்தில் நாயகி கதாப்பாத்திரத்தில் நடிக்க, சரியான வாய்ப்பிற்காக சரண்யா காத்திருந்தார்.

பின்பு மழைக்காலம் படத்தில் நாயகியாக நடிக்க வாய்ப்பு வந்ததும், முதலில் ஏற்க தயங்கினார் என்று படக்குழு கூறியுள்ளது.

இதுகுறித்து நாயகி சரண்யா கூறியதாவது, போராண்மை படத்திற்கு பின்பு நாயகி பாத்திரத்தில் நடிக்க, சரியான வாய்ப்பிற்காக காத்திருந்தேன்.

மழைக்காலம் படத்தின் கதையை கேட்டேன். இப்படத்தின் நாயகி கதாப்பாத்திரத்தில் நடிக்க முதலில் எனக்கு தயக்கமாக இருந்தது.

இந்தப்படத்தில் ஆபாசமாக நடித்து என் நடிப்பு திறமையை காட்டியுள்ளேன்.

காட்சிப்படி கலைக்கல்லூரி மாணவர்கள் முன்பு நான் ஆபாசமாக தோன்றவேண்டும். இந்தக் குறிப்பிட்ட காட்சியில் ‘ஸ்கின்-டோன்’,’பாடி-ஷுட்ஸ்’ பயன்படுத்த இயக்குனர் யோசனை சொன்னார்.

ஆனால், படத்தில் இந்தக்காட்சி யதார்த்தமாக வரவேண்டும் என்பதற்காக நான் துணிச்சலாக ஆடைகளை துறந்து நடிக்க முடிவெடுத்தேன்.

படத்தில் இது ஆபாசமான காட்சியாக இல்லாமல் கலைநயமாக வந்துள்ளது. தணிக்கை அதிகாரிகளும் இப்படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளார்கள் என்று தெரிவித்துள்ளார்.