Home பாலியல் ஆண்-பெண்ணிற்கு பருவமானவுடன் திடீர் என பாலியல் விருப்பு ஏன் ஏற்படுகிறது? …..

ஆண்-பெண்ணிற்கு பருவமானவுடன் திடீர் என பாலியல் விருப்பு ஏன் ஏற்படுகிறது? …..

30

114ஓமோன்கள் குறிப்பாக அன்ட்றோஜன் என்கின்ற ஆண்களுக்கான ஓமோன் ஆண் பெண் இருபாலாருக்கும் உண்டு. அன்ட்றோஜன் தான் பாலியல் உந்துதலை ஏற்படுத்துகிறது. பாலியல் உறவு கொள்ளத் தூண்டுகிறது. பாலியல் உந்துதல் இல்லாவிட்டால் பாலியல் உறுப்புகள் எல்லாம் ஒரு பயனுமற்றுப் போகும். இனமே இல்லாது போகும். எமது உயிர் அங்கிகளின் நோக்கம் இதுவல்லவே. இதனைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பீர்களாயின் பாலியல் விருப்பேயற்ற குழந்தைகள் பருவம் ஆன பிறகு கூட பல வாரங்களுக்கு பாலியல் சிந்தனை அற்று இருப்பர். அதன் பின்னர் எப்பொழுதும் பாலியல் சிந்தனையில் மூழ்கி இருப்பார்கள். வயது வந்தவர்களுக்கும் செயற்கை அன்ட்றோஜன் செலுத்தப்பட்டால் பருவமானவர்களைப் போலவே பாலியல் உந்தல் பெறுவார்கள். வயது வந்தவர்கள் பாலியல் உந்துதல் குறைவாக இருப்பதற்குக் காரணம் பரம்பரை அலகு (ஜீன்ஸ்) அவர்களுக்கு ஒத்துவருவதில்லை. குழந்தைகளைப் பெற்று எடுக்க வேண்டுமென்ற ஆர்வமும் இல்லை. ஏன் பருவமானவர்கள் உடனடியாக பாலியல் உறவு கொள்வதில்லை? சிலர் ஈடுபடுகிறார்கள். அநேகம் பேர் அப்படியில்லை. ஏனெனில் இது அவ்வளவு சுலபமானதல்ல. மனிதக் குழந்தைகள் நிலையான குடும்பங்களில் தாய் தந்தையர் அரவணைப்பில் வாழ்கிறார்கள். பாலியல் உறவுகொள்ள பெண்ணிற்கும் பையனுக்கும் இடையே நெருக்கம் கூடுதலாக இருத்தல் வேண்டும். குழந்தை பிறக்குமுன்னும் பின்னும் பெண்தானே குழந்தையோடு கூடிய அளவு ஈடுபாடு கொண்டிருப்பதனால் பெண்கள் கூடிய நெருக்கமான உறவுகள் ஏற்படுவதை விரும்புகின்றனர்;. பையன்கள் பாலியல் உறவை வெறும் ஒரு சம்பவமாகவே கருதுகின்றனர். பெண்கள் ஏன் இதில் கூடுதலான தயக்கம் காட்டுகிறர்கள் என்பது ஆண்பிள்ளைகளுக்கு விளங்கவில்லை. (இதே ஆண்கள் தான் பெண்கள் உடன் சம்மதத்தைத் தெரிவித்தால் மிகவும் மலிவானவர்கள் என்றும் கருத்து வெளியிடுகிறார்கள்) இத்தகைய ஆண்களின் அணுகுமுறையைப் பெண்கள் எதிர்க்கிறார்கள. சும்மா பார்த்து ரசிப்போம் என்ற பாணியில் நடக்கிறார்கள்.

பொறுப்பெதுவும் கட்டுப்பாடு எதுவுமற்ற பாலியல் உறவை விரும்புகிறார்கள். திருமணம் செய்வது பற்றிச் சந்தேகம் கொள்ளுகிறார்கள். (திருமணம் முறிவில் முடிவுற்றுவிடுமோ என்று கருதுகிறார்கள்) சில பெண்கள் பிள்ளைகளைப் பெற்றெடுத்து கணவன்மார்கள் இன்றியே வளர்த்தெடுக்கிறார்கள். பாலியல் உறவுகொள்ள தயார் நிலை அடையாத பருவமானவர்கள் செய்வதென்ன? உண்மையில் கூடிய நேரத்தை விரக்தியிலும் எட்டாக் கற்பனையிலும் செலவிடுகின்றனர். இது தீமையானது அல்ல. ஏனெனில் பாலியல் உறவு பற்றி அநேக கற்பனை எண்ணங்கள் தோன்றுகின்றன. இதனைப் பற்றி அநேக புத்தகங்கள் பலவற்றைத் தருகின்றன. பெண்கள் அநேக ஆபாசப் புத்தகங்களைப் படிக்கின்றார்கள். பருவமானவர்கள் செய்கின்ற மற்ற நடவடிக்கை தாமாகவே விந்துவை வெளியேற்றிக் கொள்வதாகும். இதனால் பாலியல் வெறி ஓரளவுக்குத் தணிகிறது. தாமாகவே விந்துவை வெளியேற்றிக் கொள்வதால் உள்ள சில நன்மைகள். – வேறு ஒருவரும் தேவைப்படாது. எல்லாம் நீங்களே! – யாருமே கருப்பம் தரிக்கமாட்டார்கள். – யாருக்கும் எந்த நோயும் தொற்றிக்கொள்ளாது. – உங்கள் உடலைப் பற்றி நீங்கள் நன்கு அறிந்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.
சுயமாய் விந்து வெளியேற்றல் என்றால் என்ன? தமது பிறப்புறுப்பைத் தாமே தூண்டி உணர்ச்சியின் உச்சக் கட்டத்தை அடைந்து பாலியல் பதட்டத்தை தணிக்கின்றனர். அநேக பையன்கள் ஓரளவுக்குச் சுயமாகவே விந்து வெளியேற்றம் செய்கின்றனர். பெண்களும் கூடத் தம் பிறப்புறுப்போடு இப்படித்தான் செய்கின்றனர். பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்றால் என்ன? பாலியல் உறவின் உச்சக் கட்டம் அடைவது என்பது ஆணுக்கு விந்து வெளியே பாயும் கட்டம். இன்பத்தை அடைந்துவிடத் துடிக்கும் நிலை. தவறுதலாக விந்தை வெளியேற்றி விட்டால் அடைய வேண்டிய பாலியல் நிலைகளை அடைய இயலாது போய்விடுவர். ஆகவே விந்து வெளியேற்றம் என்பது பாலியல் உறவின் உச்சக்கட்டம் அடைந்த நிலை ஆகாது.

இது போலவே பெண்களின் பாலியல் உறவின் உச்சக் கட்டம் என்பது யோனித் துவாரத்தசைகள் சுருக்கம் அடைந்து சுழற்சியுற்று இன்பத்தின் உச்சக் கட்டத்தை அடைகிறது. பெண்களுக்கு யோனியின் உட்புறத்தில் உணர்ச்சித் தூண்டல்கள் இருப்பதில்லை. யோனித் துவார வாயிலுள்ள சவ்வுதான் உணர்வின் உச்சக் கட்டத்தை அடைகிறது. (இதுவே ஆணின் பாலியல் புற உறுப்புப் போல உள்ளது. ஆனால் மிகவும் சிறியது) ஆகவே சுயமாக விந்தை வெளியேற்றுவது தவறல்ல சாதாரணமாக இதனை விருந்தினர் முன்பாகச் செய்யமாட்டீர்கள். ஆனால் இது சாதாரணானதே. இதனால் தீங்கு ஒன்றுமில்லை. இதனை பருவமானவர் மட்டும் செய்வார்கள் என்றில்லை. நடக்கக் கூடிய நிலைக்கு வராத சிறு குழந்தைகள் கூடத் தமது ஆண் பாலியல் உறுப்புடன் விளையாடுவார்கள். இதற்கும் பாலியல் வேட்கைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
விரக்தியை வெளிப்படுத்தும் ஓர் அம்சமே. இது பாலியல் பிரச்சினை என்று கொள்ள இயலாது. விருப்பம் இல்லாத ஆசிரியர் ஒருவரோடு பழகுகின்ற நிலையே. விரைவில் பிள்ளைகள் சுயமாக விந்தை வெளியேற்றுவது நல்லதோர் உணர்வைத் தருகிறது என்றும் சலிப்பு ஏற்படுவதை நீக்கும் நிவாரணி ஒன்று என்றும் கருதுகிறார்கள். பலமாதங்களுக்கு இதனைத் தொடராதே இருப்பர். ஏன் பெற்றோர் சுயமாக விந்தை வெளியேற்றுவதைத் தவறு என்கிறார்கள்? பிள்ளை ஓமோன்களால் வழி நடத்திச் செல்லும் போது பெற்றோர்களால் தம்பிள்ளைகளைத் தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிவதில்லை. பிள்ளைகளில் பெரியமாற்றம் ஏற்படுகிறது. பிள்ளை மாற்றம் காரணமாக பருவமாகின்றபோது பாலியல் உந்தல்களுக்கு ஆட்பட்டு விடக்கூடாதே என்று நினைத்து பெற்றோர்கள் பிள்ளைகளை அடக்கி ஆள முயலுகிறார்கள்.