Home ஆண்கள் ஆண்மையற்ற தன்மையே இந்தியாவில் அதிகமான திருமண முறிவுக்கு காரணம் ஆய்வில் தகவல்

ஆண்மையற்ற தன்மையே இந்தியாவில் அதிகமான திருமண முறிவுக்கு காரணம் ஆய்வில் தகவல்

30

Couple holding stop sign in bed
Couple holding stop sign in bed
ஆண்மையற்ற தன்மையே இந்தியாவில் அதிகமான விவாகரத்துக்கு காரணம் என ஆய்வில் தெரியவந்து உள்ளது.20 முதல் 30 சதவீத திருமண பந்தங்கள் தோல்வியுறுவதற்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தி இல்லாமையே காரணம். செக்ஸ் தொடர்பான ஆல்பா நோயியல் குழு மற்றும் ஆண்கள் பாலியல் தொடர்பான பிரச்சினைகள் கையாளும் மருத்துவர்கள் சங்கம் இணைந்து 2500க்கும் மேறபட்ட ஆண்களிடம் ஆய்வு நடத்தியது.

இந்த ஆய்வில் ஆண் உறுப்பு விறைப்பு தன்மை பாதிப்பு 50 சதவீதம் 40 வயதிற்கு மேற்பட்ட் ஆண்களிடமும்,10 சதவீதம் 40 வயதிற்கு கீழ் உள்ள ஆண்களிடமும் ஏற்படுவதாக ஆண் இனப்பெருக்க பகுதி நிபுணர் மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர் டாகடர் அனுப்தீர் கூறி உள்ளார்.

ஆண்மையின்மை குறித்து தெளிவான அறிவு இல்லாதது தவறான மருத்துவ அணுகுமுறை ஆகியவைகளால் திருமண முறிவு ஏற்படுவதாக ஆய்வில் தெரியவந்து உள்ளது.ஒரு ஆரோக்கியமான திருமண வாழ்விற்கு அதிக நேரம் தேவைப்படுகிறது.இதற்கு கணவன் மனைவி இருவரும் இணைந்து முயற்சி எடுக்க வேண்டும். யாரவது ஒருவருக்கு திருப்தி இல்லை என்றால் சரியான புரிதல் இல்லாமல் பாலியல் அதிருப்தி பிரச்சினைகள் எழும் வாய்ப்பு உள்ளது என டாகடர் அனுப்தீர் கூறி உள்ளார்.

திருமணமானவர்கள் வருடத்திற்கு 58 முறை உடலுறுவு வைத்து கொள்கிறார்கள் அல்லது வாரத்திற்கு ஒருமுறை உடலுறவு வைத்து கொள்கிறார்கள். பாலியல் பலவீனம் எனபது பொதுவானது. பாலியல் பலவீனம் உடல் உழைப்பு தேவைப்படாத வாழ்க்கை உள்ள நகரங்களில் ஜோடிகள் மத்தியில் ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு விறைப்பு தன்மை பாதிப்பு முக்கிய காரணமாக உள்ளது. 48 சதவீத நோயாளிகளில் 40 வயதிற்கு மேல் நீரழிவு மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு கடுமையான விறைப்பு தன்மை பாதிப்பு இருந்தது என ஆய்வில் தெரியவந்து உள்ளது

நிரழிவு நோய் உள்ளவர்களுக்கு விறைப்பு தனமை பாதிப்பு சுமார் 10 முதல் 15 வருட காலங்களுக்கு பிறகு ஏற்படலாம் அதனால் இந்த நோய் உள்ளவர்கள் கவலைப்பட தேவை இல்லை. நிரழிவு, மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இதற்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வரவேண்டும். விறைப்பு தன்மை குறைபாடுக்கு முதன்மை காரணங்கள் புகை, மது குடிப்பது,அதிக எடை, ஆகியவை அடங்கும்

ஆண்கள் தங்கள் ஈகோ பிரச்சினையை விட்டு விட்டு உண்மை தன்மையை உணர்ந்து உடனடியாக சிகிச்சை எடுத்து கொண்டால் இத்தகைய பிரச்சினைகளில் இருந்து விடுபடலாம். தாமதமான சிகிச்சையால் இது குணப்படுத்த முடியாமல் போய்விடுகிறது. என டாகடர் அனுப்தீர் கூறி உள்ளார்.