Home ஆண்கள் ஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதம் சொல்லும் வழிமுறைகள்…???

ஆண்மைக் குறைவுக்கு ஆயுர்வேதம் சொல்லும் வழிமுறைகள்…???

38

menஆண் மலட்டுத் தன்மை என்பது ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமல், இல்வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை. இது பல நோய்களின் தொகுப்பு. ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாததாக ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளன. இவை த்ரயோ உபஸ்தம்பங்கள் என்று ஆயுர்வேதப் பெரியோர்களால் கூறப்படுகின்றன.

1. உணவு – இது பித்தத்தை நிலைநிறுத்தும் செயல்.

2. உறக்கம் – இது கபத்தை நிலைநிறுத்தும் செயல்.

3. அப்பிரம்மச்சரியம் – முறைப்படுத்தப்பட்ட இல்வாழ்க்கை. இது வாதத்தை நிலைநிறுத்தும் செயல்.

இந்த மூன்று விஷயங்களும் ஒரு மனிதனுக்கு இன்றியமையாததாக கருதப்படுகின்றன. இல்வாழ்க்கை குறைபாடுகள் எனும்போது ஆண்மையின்மை, விறைப்புத்தன்மை இன்மை, இச்சையின்மை, விந்து முந்துதல் என்று பல நுண்பிரிவுகள் உள்ளன. ஒருவனுக்கு இல்வாழ்க்கை குறைபாடுகள் உடல் நோய்களாலோ, மனக் குறைபாடுகளாலோ அல்லது இரண்டின் காரணமாகவோ ஏற்படலாம்.

என்ன காரணம்?

இன்றைய சூழ்நிலையில் வாழும் முறை, தவறான உணவுப் பழக்கம், படபடப்பு, பயம், மனஅழற்சி, கிலேசங்கள் ஆகியவை ஆண்மைக் குறைவுக்குக் காரணமாகின்றன. தாம்பத்திய உறவில் முழுமையாக ஈடுபட முடியாமல் போகும்போது, அது மேலும் மனத்துயரத்தை ஏற்படுத்துகிறது.

விறைப்புத்தன்மை இல்லாமை என்பது ‘மேட்ரஸ்தப்ததா’ என ஆயுர்வேதத்தில் அழைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு விந்து வெளியே வராமல் சிறுநீர்ப்பைக்கு உள்ளே சென்றுவிடும். இதற்கு Retrograde ejaculation என்று பெயர். இதை ஆயுர்வேதத்தில் சுக்ரஜ உதாவர்த்தம் என்று அழைப்பர். ஒருவருடைய தாம்பத்திய உறவு மனதும், உடலும், நரம்பு மண்டலமும், ஹார்மோன்களின் இயக்கமும் சேர்ந்தது. காம இச்சை (Sex drive) எண்ணங்களாலும், வார்த்தைகளாலும், தொடு உணர்வாலும், பார்வைகளாலும் தூண்டப்படும். அதன் பின் உணர்ச்சித் தூண்டல் ஏற்படும். மூளைக்கும் தண்டுவடத்துக்கும் ஆண் உறுப்பின் ரத்தக் குழாயில் ஓடுகிற சுத்த ரத்தத்துக்கும் சம்பந்தம் உண்டு.

ஆண் உறுப்பில் உள்ள ரத்த நாளங்களில் ரத்தம் நன்றாக ஓட வேண்டும். இவ்வாறு ஓடும்போது அங்கு இருக்கும் தசைகள் இறுகி, ஆண் உறுப்பில் அழுத்தம் அதிகமாகி விறைப்புத்தன்மையை ஏற்படுத்தும். விந்து வெளியேறும் உச்ச நிலையை அடைந்த பிறகு, விறைப்புத் தன்மை ஏற்படாது. 20 நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் ஏற்படலாம்.

காம இச்சை குறைவதற்கு மன சோகம், மனப் படபடப்பு, மனைவியின் மீது ஈர்ப்பு இல்லாமை, சில மருந்துகள், டெஸ்டோஸ்டீரோன் (testosterone) எனும் ஆண் ஹார்மோன் குறைதல் போன்றவை எல்லாம் காரணமாகின்றன. வயது அதிகரிக்கும்போது, இது குறையலாம். காம இச்சைகளைத் தடுப்பதன் மூலமும் விறைப்புத்தன்மை குறையலாம்.

மனசோகத்துக்குச் சாப்பிடும் மருந்துகளால் இது உருவாகலாம். மைதுனத்தில் சுகம் கண்டு, தாம்பத்திய உறவில் சுகம் அற்றுப் போகிறவர்களும் உண்டு. மனம் சார்ந்த சிகிச்சைகளாகிய ஸத்வாஜய சிகிச்சை, மனதுக்கு பலம் ஊட்டும் சிகிச்சைகள் இதற்கு பலன் அளிக்கும்.