Home ஆண்கள் ஆண்மைக் குறைபாடு

ஆண்மைக் குறைபாடு

56

304561650amil Doctor, Anmai kuraiw, Aanmai kurawum thirwum, Binthu Munthuthal, Vinthu Munthuthal, Gonorrhea, Gonorrhea symptoms, Gonorrhea and chlamydia, Gonorrhea test, Aids symptoms, Aids origin, Pengalai eppadi utacham adaya seivathu, Tamil Doctors, Aanmai kuraipada, Antharangam, Anmai Kurawu, Anamai Kurawukkana thirwu, Amuthla irawu, aan kuri, Aanmai, Aanmai ilappu, Tamil Kevi Pathil, Udchakaddam, Manawiyai thirupthi paduththuwathu eppadi, Anbana Manaiwi, Kathal, Tamil sex problems, Sex problems, Doctor, Sexy videos, Tamil stories. இதில் பல வகைகள் இருந்த போதும் ‘ஆண்குறி விறைப்படைதல்’ குறைபாடு மிக முக்கியமானதாகும். உடலுறவின்போது ஆண் உறுப்பு போதியளவு விறைப்படைந்து நிற்காதலால் உடலுறவு திருப்தியைக் கொடுக்காத நிலை எனச் சொல்லலாம். இது ஓரிரு முறை ஏற்பட்டால் அதனை பெரிய குறைபாடாகக் கூறமுடியாது. இளைஞர்களில் ஏற்படுவது பெரும்பாலும் உளம் சார்ந்ததே.
ஆயினும் தொடர்ச்சியாக இது நிகழ்ந்தால் அதனை Erectile Dysfunction எனக் கூறுவர். வயது அதிகரிக்க அதிகரிக்க இது ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும். இது மிகவும் பரவலாகக் காணப்படும் ஒரு பிரச்சனை ஆகும். ஆண்களில் கிட்டத்தட்ட பத்தில் ஒருவருக்கு இது ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. சிலருக்கு லேசாகவும் சிலருக்கு மிகக் கடுமையாகவும் என இது பல்வேறு நிலைகளில் ஏற்படக் கூடும்.
இருந்தபோதும் முக்கியமான அம்சம் என்னவென்றால் 90 சதவிகிதமானவர்கள் அதனை வெளிவிடாமல் மனதில் வைத்துக் கொண்டு துன்புறுகிறார்களே ஒழிய வைத்திய ஆலோசனை பெறுவதில்லை.
காரணம் என்ன?
1) பலருக்கு (80%) இது ஒரு உடல் சார்ந்த நோயாகும். பெரும்பாலும் வேறு நோய்களின் வெளிப்பாடாக இருக்கலாம்.
a.முக்கியமாக இது இரத்தக் குழாய்கள் (நாடி) சார்ந்த நோயாகும். பக்கவாதம், மாரடைப்பு போன்றவையும் அவ்வாறே இரத்தக் குழாய் நோய்கள்தான்.
b.நீரிழிவு ஒரு முக்கிய காரணியாகும். உண்மையில் 35 சதவிகிதமான நீரிழிவு நோயளர்களை இப் பிரச்சனை பாதிப்பதாக தரவுகள் கூறுகின்றன.
c.புரஸ்ரேட் நோய் முள்ளந் தண்டு நோய் ஆகியவற்றிற்கான சத்திரசிகிச்சையின் பின்விளைவாகவும் இது ஏற்படலாம்.
d.போதைப் பொருள் பாவனை மற்றொரு முக்கிய காரணமாகும். புகைத்தல், மதுபாவனை, ஏனைய போதைப் பொருள் பாவனைகள் இதனைக் கொண்டுவரும்.
e.ஆண் ஹோர்மோனான டெஸ்டஸ்ரரோன் குறைபாடு மற்றொரு காரணமாகும்.
2) சிலரில் இது மன உணர்வுகளோடு தொடர்புள்ள பிரச்சனையாகும். உளநெருக்கீடு, மனச்சோர்வு போன்ற உளநோய்கள் உள்ளவர்களுக்கு இது ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாகும். பாலுறவு பற்றிய பதற்றம் (Performance Anxiety), பாலுறவு கொள்ளப் போகும் பெண்ணுடனான உறவில் உள்ள உரசல் (realationship Failure), Fear of intimacy போன்றவையும் காரணமாகலாம்.
3) வேறு நோய்களுக்கு உபயோகிக்கும் மருந்துகளின் பக்கவிளைவாகவும் இக் குறைபாடு ஏற்படலாம். பிரஸருக்கு உபயோகிக்கும் தயசைட் மாத்திரை, மனச் சோர்வுக்கு உபயோகிக்கும் மருந்துகள், தூக்க மருந்துகள், குடலில் அமிலம் சுரப்பதைக் குறைப்பதற்காக உபயோகிக்கும் சிமிரிடீன் மாத்திரை போன்றவை சில மருந்துகளாகும்.
மருந்து காரணம் எனக் கருதினால் உடனடியாக அதனை நிறுத்தி ஏற்கனவே உள்ள நோயை அதிகரிக்கச் செய்து விட வேண்டாம். மருத்துவருடன் கலந்து ஆலோசித்து அதற்கான மாற்று மருந்தை உபயோகிக்க வேண்டும்.
உளம் சார்ந்ததா உடல் சார்ந்ததா?
பலருக்கு இது உடல் சார்ந்ததாகவும், சிலருக்கு உளம் சார்ந்ததாகவும் இருக்கிறது என்றோம். இதனை வேறுபடுத்தி அறிவது எப்படி?
உளம் சார்ந்ததின் அறிகுறிகள்
a.திடீரெனத் தோன்றுவது,
b.சில நாட்களில் விறைப்பு ஏற்படுவும் வேறு சில நாட்களில் விறைப்பு ஏற்பட மறுப்பதும்,
c.பொதுவாக 60க்கு உட்பட்ட வயதுகளிலும் பொதுவாக உளம் சாரந்த ஆண்மைக் குறைபாடு எனலாம்.
d.காலையில் நித்திரை விட்டெழும்போது எவருக்கும் தானாக உறுப்பு விறைப்படையும். இது இயல்பானது. சிலருக்கு தினமும் இல்லாமல் சில வேளைகளில் மட்டும் அதிகாலை விறைப்பு ஏற்படுகிறதெனில் அது உளம் சார்ந்ததே.
e.வழமை போல உறவில் ஆர்வமற்றுப் போவதும் அத்தகையதே
உடல் சார்ந்ததின் அறிகுறிகள்
a.ஆண்மைக் குறைபாடு படிப்படியாக தோன்றி வரவர மோசமாகும்.
b.எப்பொழுதுமே விறைப்பு ஏற்படாதிருத்தல்.
c.பொதுவாக 60க்கு மேற்பட்ட வயது.
d.அதிகாலையில் தானாக ஆணுறுப்பு விறைப்படைதல் முற்றாக அற்றுப் போதல்.
e.உடலுறவில் ஆர்வம் இருந்தபோதும் ஆணுறுப்பு ஒத்துழைக்க மறுத்தல்.
மருத்துவ ஆலோசனை
மேற் கூறிய அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.
பிரச்சனை உள்ளவருக்கு டெஸ்டஸ்ரரோன் குறைபாடு இருக்கிறதா என அறிய மருத்துவர் அவரின் ஆண்குறியின் வளர்ச்சி, மார்பின் அளவு, முக ரோமங்களின் வளரச்சி வேகம் ஆகியவற்றை கேட்டும் பரிசோதித்தும் அறிவார். குருதியில் ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்ரரோன் அளவை பரிசோதிக்கவும் கூடும். நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் ஆகியன இருக்கின்றனவா என சோதித்து அறிவார்.
சிகிச்சை
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் இருந்தால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவது அவசியம்.
புகைத்தல், மது பாவனை ஆகியவற்றின் பாவனையை நன்றாகக் குறைக்க வேண்டும். அல்லது முற்றாக நிறுத்துவது சாலச் சிறந்தது.
உளவளத் துணை பலருக்கு உதவி செய்யும்.
மருந்துகளைப் பொறுத்த வரையில் phospho diesterase type 5 inhibitors (PDE5 inhibitors) என்ற வகை மருந்துகள் ஆண்குறி விறைப்படைதல் குறைபாட்டிற்கான சிகிச்சையைப் பொறுத்த வரையில் புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன.
70சதவிகிதமானவர்களுக்கு இவை நல்ல பலனைக் கொடுக்கின்றன.
ஆயினும் அண்மையில் பக்க வாதம், மாரடைப்பு ஆகியன வந்தவர்கள் இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
அல்லது மாரடைப்பு வருவதற்கான நிலையில் உள்ள இருதய நோயாளர்கள் (Unstable Angina) தவிர்க்க வேண்டும்.
நெஞ்சு வலிக்கு ரைனைற்றேட் (Trinitrate) உபயோகிப்பவர்கள் அதனுடன் சேர்த்து உபயோகிக்கக் கூடாது.
நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களும் உபயோகிக்கலாம்.
இவற்றில் மூன்று வகையான மாத்திரைகள் இப்பொழுது கிடைக்கின்றன.
அவையாவன
1.Sildenafil
2.Vardenafil
3.Tadalafil
இவை பொதுவாக உடலுறவிற்கு சற்று நேரம் முன்பாக எடுக்க வேண்டிய மாத்திரைகளாகும். வேறுபட்ட நேரத்திற்கு பயன் தரும்.
சில்டெனபில் என்பது வயக்ரா என்ற பெயரில் முதல் முதலாக அறிமுகமாகி மிகவும் பெயர் பெற்றதாகும்.
ஏனையவை அதற்கு பிந்திய மருந்துகள்.
சில்டெனபில்
உடலுறவிற்கு 60 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் நான்கு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.
வார்டெனபில்
இது உடலுறவிற்கு சுமார் 25 முதல் 45 நிமிடங்கள் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் ஆறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது.
ரடலபில்
இது உடலுறவிற்கு சுமார் 30 நிமிடங்கள் முதல் 12 மணிநேரம் முன்பதாக உட்கொள்ள வேண்டியது.
சுமார் முப்பத்தாறு மணி நேரத்திற்கு வேலை செய்யக் கூடியது. எனவே வாரத்திற்கு இரண்டு எடுத்தாலே நாள் முழுவதும் வேலை செய்யும் எனலாம்.
பக்க விளைவுகள்
இம் மருந்துகள் சிலருக்கு நெஞ்செரிப்பு, வயிற்றுப் பிரட்டு, வாந்தி, தலையிடி, தலைப்பாரம், தசைப்பிடிப்பு, மூக்கடைப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தலாம்.
இவை சற்று நேரத்தில் மறைந்துவிடக் கூடியன.
ஏனைய சிகிச்சைகள்
டெஸ்டஸ்ரரோன் குறைபாடு உள்ளவர்களுக்கு அதனை மாத்திரைகளாகவோ, ஊசியாகவோ கொடுப்பதுண்டு.
வேறு சில மாத்திரைகள், உபகரணங்கள் போன்றவையும் உதவக் கூடும்.
இவை எதனையும் மருத்துவ ஆலோசனையுடன் மாத்திரமே உபயோகிக்க வேண்டும்.