Home பாலியல் ஆண்கள் வயசுக்கு வருவது எப்போது?

ஆண்கள் வயசுக்கு வருவது எப்போது?

37

puberty-male-and-female-stages-Physical-changes-specialist-dr.senthil-kumar-vivekananda-clinic-sex-doctor-velachery-chennai-tamilnadu-900x598ஆண்கள் வயசுக்கு வருவது எப்போது?

பெண்கள் மட்டும்தான் பூப்பெய்துவார்களா… ஆண்களும் கூட பருவம் எய்தத்தான் செய்கிறார்கள். ஆனால் எந்த வயதில் என்பதுதான் பலருக்கும் தெரிவதில்லை. சமிபத்தில் அமெரிக்காவில் நடந்த ஆய்வு ஒன்றில் ஆண்கள் 6 வயதிலேயே கூட பூப்பெய்தி விடுவதாக தெரிவித்துள்ளனர்.

முன்பெல்லாம் ஆண்கள் 12 வயதில் பூப்பெய்தினார்களாம். ஆனால் இப்போது அது குறைந்து 6 வயதிலேயே கூட பூப்பெய்தும் ஆண்கள் அதிகரித்துள்ளனராம்.

6 வயதிலேயே பெரும்பாலான ஆண்களுக்கு முதிர்ச்சித்தன்மை தெரியத் தொடங்கி விடுகிறதாம். அதுதான் அவர்கள் பூப்பெய்தும் நிலையை எட்டி விட்டதற்கான அறிகுறியாம்.

இதுதொடர்பாக அமெரிக்காவில் 4000 சிறார்களிடம் தகவல் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் வெள்ளை இனத்தவரிடையே பூப்பெய்தும் வயது சராசரியாக 10 ஆக உள்ளதாம். அதேசமயம், கருப்பர் இனத்தவர்களிடையே 9 வயதாக பூப்பெய்தும் வயது இருக்கிறதாம்.

இங்கிலாந்து உள்ளிட்ட பிற நாடுகளிலும் கூட கிட்டத்தட்ட இதே வயதில்தான் ஆண்கள் பூப்பெய்துகிறார்களாம்.

வெள்ளை இன சிறார்களிடையே 6 வயதிலேயே கூட சிலருக்கு பூப்பெய்தும் அறிகுறிகள் தெரிகிறதாம். இந்த எண்ணிக்கை 9 சதவீதமாக உள்ளது. அதேசமயம், கருப்பர் இனத்தவரிடையே 6 வயதில் பூப்பெய்துவது என்பது 20 சதவீதம் என்ற அளவில் உள்ளது.

9 சதவீத வெள்ளை இன ஆண்களைப் பொறுத்தவரை சராசரியாக 6 வயதிலேயே அவர்களுக்கு விதைப் பை வளர்ச்சி நன்கு வந்து விடுகிறதாம். கருப்பர் இனத்தவர்களில் இது 20 சதவீதமாக உள்ளது.

அந்தரங்க உறுப்பு உள்ள பகுதியில் முடி வளருவது, விதைப் பை விரிவடைந்த அடுத்த ஆண்டிலேயே ஏற்படுகிறதாம். இது பொதுவாக அனைத்து வயதினரிடையேயும் ஒரே மாதிரியாக உள்ளதாம்.

பெண்களைப் பொறுத்தவரை மார்பக வளர்ச்சிதான் அவர்கள் பூப்பெய்தப் போவதற்கான முதல் அறிகுறியாக கருதப்படுகிறது. 10 சதவீத வெள்ளை இனப் பெண்களில் 7 வயதில் இது நடைபெறுகிறதாம்.

கருப்பர் இனப் பெண்களில் இது 23 சதவீதமாக உள்ளது. பெண்களைப் பொறுத்தவரை பூப்பெய்தும் வயது சராசரியாக 12 ஆக உள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.