Home பெண்கள் அழகு குறிப்பு ஆண்களே! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

ஆண்களே! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

23

ஆண்களே-நீங்க-ஹேண்ட்சம்-பாய்-போன்று-மாற-அவசியம்-பின்பற்ற-வேண்டியவைகள்ஆண்களே! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!
இயற்கையாகவே அழகானவர்கள் தான் ஆண்கள். இவர்கள் மேக்கப் போட்டு தான் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டுமென்ற அவசியம் இல்லை. உண்மையான ஆண் மகன் தனது உடலை கட்டுக்கோப்புடனும், ஆரோக்கியமான பழக்கவழக்கங்களையும் பின்பற்றினாலே அழகாக காணப்படுவார்கள்.

ஆண்களே! நீங்க ‘ஹேண்ட்சம் பாய்’ போன்று மாற அவசியம் பின்பற்ற வேண்டியவைகள்!

அக்காலத்தில் உள்ள ஆண்கள் கடுமையாக வியர்க்க உழைத்ததுடன், ஆரோக்கியமான உணவுகளையும், சரியான தூக்கத்தையும் மேற்கொண்டதனால் தான், அக்கால ஆண்கள் 40 வயதாகியும் நன்கு அழகாக காட்சியளித்தார்கள்.
தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையினால், இன்றைய காலத்தில் ஆண்கள் 30 வயதிலேயே முதுமைத் தோற்றத்தைப் பெறுகிறார்கள். இதனால் பெண்களைப் போன்று ஆண்களும் தங்களை அழகாக வைத்துக் கொள்ள கண்ட கண்ட க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துகின்றனர்.

இப்படி செய்வதால் மட்டும் ஆண்கள் அழகாகிவிட முடியாது. எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஆண்கள் தங்களின் அழகை அதிகரிக்க கட்டாயம் பின்பற்ற வேண்டியவைகளைப் பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்துப் பின்பற்றுங்கள்.

கட்டாயம் சலூன் செல்லவும் ஆண்கள் தவறாமல் 2-3 மாதங்களுக்கு ஒருமுறை சலூன் சென்று, ஹேர் கட், ஷேவிங், ட்ரிம்மிங் போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும். இதனால் முடி நன்கு ஆரோக்கியமாக இருப்பதோடு, தோற்றத்தையும் அழகாக வெளிப்படுத்தும்.

பெட்சீட்டுகளை மாற்றவும்
படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் போன்றவற்றை 10 நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும். இதனால் தலையணை உறையில் உள்ள அழுக்குகள், எண்ணெய் பசை போன்றவை சருமத்தை தாக்காமல், சருமத்தை பாதுகாக்கலாம். மேலும் இப்படி செய்து வந்தால், பருக்கள், முடி உதிர்வது போன்றவற்றைத் தவிர்க்கலாம்.

வாய் பராமரிப்பு பெண்களுக்கு மட்டும்
புன்னகை அழகைத் தருவதில்லை, ஆண்களுக்கும் தான். ஆகவே தினமும் பற்களை இரண்டு முறை துலக்குவதோடு, ப்ளாஷ் செய்யவும் வேண்டும். முக்கியமாக பற்களை துலக்கும் போது, நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் வாய் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கலாம்.

வாய் பராமரிப்பு
பெண்களுக்கு மட்டும் புன்னகை அழகைத் தருவதில்லை, ஆண்களுக்கும் தான். ஆகவே தினமும் பற்களை இரண்டு முறை துலக்குவதோடு, ப்ளாஷ் செய்யவும் வேண்டும். முக்கியமாக பற்களை துலக்கும் போது, நாக்கையும் சுத்தம் செய்ய வேண்டும். இதனால் வாய் துர்நாற்றம் வீசுவதைத் தவிர்க்கலாம்.

8 மணிநேர தூக்கம்
அழகை அதிகரிக்க வேண்டுமெனில் நல்ல தூக்கத்தையும் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக 7-8 மணநேர தூக்கத்தை ஆண்களும் சரி, பெண்களும் சரி அவசியம் பின்பற்ற வேண்டும். இதனால் சரும செல்கள் புத்துயிர் பெற்று, சருமத்தை அழகாக வெளிக்காட்டும். முக்கியமாக, நல்ல நிம்மதியான தூக்கத்தின் மூலம்

சரும பராமரிப்பும்
அவசியம் அவ்வப்போது முகத்திற்கு ஃபேஸ் பேக், ஸ்கரப் போன்றவற்றை செய்ய வேண்டும். அதுமட்டுமல்லாமல், தினமும் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனால் சரும் வறட்சி அடைவதைத் தடுப்பதோடு, சூரியக் கதிர்களால் சருமம் பாதிக்கப்படுவதையும் தடுக்கலாம்.

தண்ணீர் அவசியம்
எப்படி அழகை அதிகரிக்க தூக்கம் முக்கியமோ, அதேப் போல் தண்ணீர் குடிப்பதும் மிகவும் முக்கியம். இதன் மூலம் சரும செல்களுக்கு வேண்டிய நீர்ச்சத்து கிடைத்து, சருமம் ஆரோக்கியமாகவும், சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதையும் தடுக்கலாம். ஆகவே தினமும் 8 டம்ளர்களுக்கு அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். மேலும் ஆல்கஹால், காப்ஃபைன் போன்றவற்றை அதிகம் குடிப்பதையும் தவிர்க்க வேண்டும்.

உடற்பயிற்சி
முக்கியம் இன்றைய காலத்தில் ஆண்கள் கடுமையாக வியர்க்க உழைக்க வாய்ப்பில்லாத காரணத்தினால், தங்களின் உடலை கட்டமைப்புடன் வைத்துக் கொள்ள தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தினமும் சரியாக உடற்பயிற்சி செய்யாமல் இருந்தால், பின் ஆங்காங்கு உடலில் கொழுப்புக்கள் சேர்ந்து, விரைவில் முதுமைத் தோற்றத்தைப் பெற்று, பின் ‘அங்கிள்’ போன்று தான் காட்சியளிக்க நேரிடும்