Home பாலியல் ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள்

ஆண்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லைகள்

53

suntv-sexபாலியல் தொல்லை என்றாலே பெண்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா? ஆண்களுக்கு இல்லையா? குடும்ப வன்முறை சட்டம் இயற்றப்பட்ட போதே ஆண்கள் மத்தியில் சலசலப்பு எழுந்தது. திருத்த வேண்டும் என்ற கோரிக்கை இருக்கிறது. தற்போது பணியிடங்களில் பாலியல் தொல்லையிலிருந்து பெண்களைப் பாதுகாக்க சட்டம் இருக்கிறது.
பணியிடங்களில் பாலியல் தொல்லைக்கு எதிராக பெண்களை பாதுகாக்கும் சட்டம் இருக்கிறது. இந்த சட்ட‍த்தில் ஆண்களுக்கு நேரும் தொந்தரவுகளையும் சேர்ப்பது அவசியமா?ஆணும் பெண்ணும் சமம் தானே? சேர்க்கத்தான் வேண்டும் என்ற கருத்தே இருக்கிறது.பெண்களுக்கு நேரும் தொல்லைகளுக்கும் ஆண்களுக்கு நேரும் தொல்லைகளுக்கும் என்ன வித்தியாசம்?ஆண்களுக்கு நிகழ்வது அபூர்வமானது.தவிர அப்படி ஒரு பெண் தொல்லையை தந்தாலும் அது மிகவும் நுட்பமாக இருக்கும்.

பெண் தரும் பாலியலுக்கான தொல்லைகள் ?
* நண்பர்களை பிரித்து தனிமைப்படுத்துவது.
* செல்வாக்கை குறைக்க முயற்சி செய்வது.
* அதிகாரிகளிடம் பொய்யான காரணங்களை சொல்லி முறையிடுவது.
* மற்ற பெண்களையும் தனக்கு ஆதரவாக மாற்றுவது.
* பணியில் ஒத்துழைக்க மறுப்பது
* நண்பர்களை விட்டே பின்தொடர்வது.
* தொடர்ந்து இமேஜை கெடுக்கும் விதத்தில் அவதூறு பரப்புவது.
* செயலையும்,நோக்கங்களையும் முடக்க நினைப்பது.

இப்படி இருந்தால் ஆண்களுக்கு பாலியல் தொல்லை என்று சேர்ப்பது கஷ்டம். ஆண் ஒருவனால் தனக்கு பாலியல் தொல்லை இருக்கிறது என்று நிரூபிக்க முடிந்தால் பெரிய விஷயம்.ஆண்களைப்போல பெண் வெளிப்படையாக தொல்லை தருவது வாய்ப்பில்லாத ஒன்று.மற்ற ஆண்களும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள்.சமூகத்தின் உதவி கிடைப் பதும் கஷ்டம்.பெரிய்ய இவன்?! என்பார்கள்.ரொம்ப்ப்ப்ப நல்லவரு என்று கிண்டலடிக்கவும் கூடும்.

பேருந்தில் ஒரு பெண் தன்னை இடித்து விட்டான் என்றால் அதிகளவில் ஆண்களே அடிக்க வருவார்கள். ஆனால் ஒரு பெண் மீது ஆண் புகார் கூறினால் மற்ற பெண்களே விரும்ப மாட்டார்கள். தனிமைப்படுத்தப்பட வாய்ப்புகள் அதிகம். ஆனாலும் ஆண்களுக்கும் பொருந்துமாறு சட்டம் இருப்பதே சரியானது. நல்லவர்கள் யாரேனும் பாதிப்பிலிருந்து காத்துக் கொள்ளவும் வழியிருக்கும்.

ஏதேனும் ஒருவகையில் தொல்லைக்கு ஆளாகாத பெண் இருந்தால் அது அபூர்வம். ஆணுக்கு பெண்ணால் தொல்லை நேர்ந்தால் அது அதிசயம். இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான்.ஒருவரே இருந்தாலும் பாதிக்கப்பட்டால் அவருக்கு நிவாரணம் இருக்க வேண்டும். அவர் ஆணாக இருந்தால் என்ன? பெண்ணாக இருந்தால் என்ன?