Home சூடான செய்திகள் ஆணுறை விளம்பரம் குறித்த விமர்சனம் கம்யூ. தலைவருக்கு சன்னி லியோன் பகிரங்க கடிதம்

ஆணுறை விளம்பரம் குறித்த விமர்சனம் கம்யூ. தலைவருக்கு சன்னி லியோன் பகிரங்க கடிதம்

29

201509041743425847_On-the-topic-of-Sunny-Leone-an-open-letter-to-the-Left_SECVPFகனடாவில் ஆபாச படங்களில் நடித்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்துக் கொண்டது.சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

தற்போது சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சன்னி லியோனின் விளம்பரத்தால் பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரிக்கும் என்று உத்தரபிரதேச மூத்த இடதுசாரி தலைவர் அதுல் குமார் அஞ்சான் கண்டனம் தெரிவித்துள்ளார்

இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் அதுல் குமார் அஞ்சான் கூறுகையில், ”சன்னி லியோன் நடித்துள்ள ஆணுறை விளம்பரத்தை மக்களை பார்க்க அனுமதித்தால் பாலியல் பலாத்கார சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்” என்று கூறினார்.

பின்னர் தனது விமர்சனத்துக்கு மன்னிப்பு கோரினார்.

இந்த நிலையில் இது குறித்து தனது டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நடிகை சன்னி லியோன்

”மக்களின் சக்தியாக இருப்பவர்கள் என்னை விமர்சனம் செய்து தங்கள் நேரத்தையும் ஆற்றலையும் வீணாக்குவது எனக்கு வருத்தமாக உள்ளது.
அதற்கு பதிலாக ஏழைகளுக்கு உதவ கவனம் செலுத்தலாம்”.என தனது டுவிட்டரில் கூறி உள்ளார். மேலும் இது குறித்து கம்யூனிஸ்ட் தலைவருக்கு அவர் ஒரு பகிரங்க கடிதமும் எழுதி உள்ளார்.