Home ஆரோக்கியம் ஆணுறை பயன்படுத்தாமல் உடலுறவில் ஈடுபடும் போது கருத்தரிப்பதை தடுக்க சில டிப்ஸ்.

ஆணுறை பயன்படுத்தாமல் உடலுறவில் ஈடுபடும் போது கருத்தரிப்பதை தடுக்க சில டிப்ஸ்.

16

இன்றைய கால தம்பதியினர்கள் திருமணமான உடன் கருத்தரிக்க விரும்புவதில்லை. அதற்காக திருமணத்திற்கு பின் தங்களின் ஆசை உணர்ச்சிகளை அடக்கிக் கொண்டும் இருப்பதில்லை. மாறாக அவர்கள் உறவில் ஈடுபடும் போது, கருத்தரிக்காமல் இருப்பதற்கு ஆணுறை (கொண்டம்) பயன்படுத்துவார்கள். இருப்பினும் பலருக்கு இதனைப் பயன்படுத்துவதில் இஷ்டம் இல்லை.

அத்தகையவர்கள் காண்டம் பயன்படுத்தாமல் கருத்தரிப்பதை தடுக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பதைத் தெரிந்து கொண்டு உறவில் ஈடுபட வேண்டும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை காண்டம் பயன்படுத்தாமல் கருத்தரிப்பதை தடுக்க சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளது. குழந்தை வேண்டாம் என்று நினைக்கும் தம்பதிகள் உறவின் போது ஆனந்தத்தை அனுபவிக்க இந்த டிப்ஸ்களை மனதில் கொண்டு, அவற்றில் முடிந்ததைப் பின்பற்றினால் போதும்.

பாதுகாப்பான நாட்கள்
பாதுகாப்பான நாட்களில் உடலுறவில் ஈடுபட்டால், கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம். அதாவது மாதவிடாய் சுழற்சி ஆரம்பமாகும் 7 நாட்களுக்கு முன்பிருந்து, மாதவிடாய் முடிந்து 7 நாட்கள் வரை பாதுகாப்பான நாட்கள். இந்நாட்களில் உடலுறவில் காண்டம் பயன்படுத்தாமலேயே உடலுறவில் ஈடுபடலாம்.
10-1418209409-1-calendars (1)

‘புல் அவுட்’ முறை
பெரும்பாலான தம்பதிகள் பின்பற்றும் ஒரு முறை தான் புல் அவுட் முறை. இந்த முறை முற்றிலும் பாதுகாப்பானது அல்ல. இருப்பினும். நிபுணர்களின் கருத்துப்படி, இந்த முறைப்படி நடந்தால், 83 சதவீதம் கருத்தரிப்பதைத் தவிர்க்கலாமாம். ஆனால் இம்முறையை பின்பற்றும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
10-1418209415-2-sex

காப்பர் T
காப்பர் T என்னும் கருவியை பெண்கள் தங்களின் பிறப்புறுப்பில் அனுபவமிக்க மருத்துவர்களின் உதவியுடன் பொருத்திக் கொண்டாலும், கருத்தரிப்பதைத் தவிர்க்கலாம். மேலும் பெரும்பாலான தம்பதிகள் இதனைத் தான் பின்பற்றுகிறார்கள்.
10-1418209420-3-birth-control-loop

கருத்தடை மாத்திரை
காண்டம் பயன்படுத்த பிடிக்கவில்லை என்றால், கருத்தடை மாத்திரையை பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் எடுத்து வர வேண்டும்.
10-1418209426-4-pill

கை விளையாட்டுக்கள் 
கருத்தரிக்க வேண்டாம் என்று நினைக்கும் தம்பதிகள், வெறும் கை விளையாட்டுக்கள் மட்டும் விளையாடி தங்களின் ஆசைகளை தணித்துக் கொண்டாலும், கருத்தரிப்பதைத் தவிர்க்க முடியும்.