Home சூடான செய்திகள் ஆணிடம் அதைப்பற்றி கேட்க கூச்சமா இருக்கா?… இப்படியும் கேட்கலாமே…

ஆணிடம் அதைப்பற்றி கேட்க கூச்சமா இருக்கா?… இப்படியும் கேட்கலாமே…

26

பெண்கள் மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூச்சம் என்பது இருக்கத்தான் செய்யும். சில ஆண்கள் தான் வளர்ந்த விதத்தின் காரணமாக இயல்பாகவே கூச்ச சுபாவம் நிறைந்தவர்களாக இருப்பார்கள். சிலருக்கு பெண்களிடம் பேச கூச்சமாக இருக்கும். அந்த மாதிரி ஆண்களுக்கு காதல் வந்தால், அந்த பெண்ணை டேட்டிங்குக்கு கூப்பிட அதிக தயக்கம் காட்டுவார்கள்.

பெண்ணே ஒப்புக்கொள்ள ரெடியாக இருந்தாலும் இவர்களுக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபிள் உண்டாகிவிடுகிறது. அதுபோன்ற ஆண்களும் அந்த விஷயங்களில் கலக்குவதற்கென சில வழிகள் உண்டு. எப்படி பெண்ணிடம் ட்ரை பண்ணலாம்?

கூச்ச சுபாவம் உடைய ஆண்கள் மிக விரைவாக, பதட்டமடைந்து விடுவார்கள். அப்படி இல்லாமல் பெண்களிடம் தைரியமாக மனதில் உள்ளதை சொல்ல வேண்டுமென்றால், முதலில் சாதாரணமாக வழக்கம் போல் பார்க், ரெஸ்ட்டாரண்ட் என அழைத்துச் செல்லுங்கள்.

முதலில் நீங்கள் இருவர் மட்டும் தனியாக உட்கார்ந்து மனதுக்கள் ஒருவரைப் பற்றி இன்னொருவர் என்ன நினைக்கிறார்கள் என்று மனம் விட்டுப் பேசினாலே உங்களுடைய கூச்சம் குறையத் தொடங்கிவிடும். தயக்கம் தான் இதுபோன்ற சங்கடங்களுக்குக் காரணமாக இருக்கும். அதனால் முதலில் தயக்கத்தை விட்டொழியுங்கள்.

பெண்களும் அப்படித்தான். ஆண்களிடம் எப்படி தன்னுடைய மனதில் உள்ள ஆசையை வெளிப்படுத்துவது? அவன் தவறாக நினைத்துவிட்டால்? என்று தயங்குவதுண்டு. ஆண்களிடம் நெருக்கமாக இருக்கும்போது, அவர்கள் உங்களிடம் சொல்லி விட்டு மறந்து போன பழைய நினைவுகளை ஞாபகப்படுத்துங்கள்.

அப்படி செய்யும் போது நீங்கள் அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பதாக நம்புவார்கள். அவர்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை ஞாபகப்படுத்தினால் ஆண்கள் குஷியாகிவிடுவார்கள். அப்போது நைசாக நீங்கள் டேட்டிங் மேட்டரை எடுத்துவிட்டால் உடனே கிரீன் சிக்னல் தான்.

அவருடைய ஐடியாக்களையும் செயல்களையும் புகழ்ந்து தள்ளுங்கள். யார் அவர்களைப் பாராட்டும் போது வேண்டாம் என்பார்கள். எவ்வளவு கூச்ச சுபாவம் உடையவராக இருந்தாலும் பாராட்டும் போது, தயக்கமெல்லாம் காணாமல் போய்விடும். அதுபோன்ற சமயங்களில் நீங்கள் கேட்பதெல்லாம் கிடைக்கும். இந்த சான்ஸை மிஸ் பண்ணாதீங்க…

குறிப்பாக, அவர் கூச்ச சுபாவம் உடையவர் என்பதை இந்த சமயங்களில் நினைவுபடுத்தாதீர்கள். பிறகு அவர்கள் அதிலும் சொதப்பிவிடுவார்கள்.