பெண்களுடைய உடலைவிட்டு உதிரம் மாதவிடாய் நாட்களில் வெளியே றுகின்றது. இது ஒருவருக்கொருவர்
மாறுபடும். சிலநாட்களில் உதிரப்போக்கு மிகஅதிகமாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் அடர் சிவப்பு நிறத்தில் இருக்கும்.
மாதவிடாயின் இறுதி நாட்களில் உதிரப்போக்கு குறை வாக இருக்கும். அத்தகைய நாட்களில் உதிரத்தின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். அவ்வாறு இல்லாமல் சில பெண்களுக்கு உதிரத்தின் நிறம் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் இருக்கலாம்.
இவ்வாறு கலர்மாறுபட்டு இருந்தால் பெண்க ள் கண்டிப்பாக கவனிக்க வேண்டும். அடர் பழுப்பு இரத்தநிறம், பழைய இரத்தத்தை குறி க்கிறது. நீண்டகாலமாக கருப்பையில் சேமி க்கப்பட்ட இந்த இரத்தம், நீண்டநேரம் எடுத்து க் கொண்டு கருப்பையை விட்டு வெளியே வருகிறது.
இந்தவகை உதிரப்போக்கு பொதுவாக அதிகாலைநேரத்தில் காணப்படுகி றது.சிவப்புநிறம் புதிய இரத்தத்தைக்குறிக்கின்றது. மேலும், இந்த நிற உதிரம் கருப்பையில் இருந்து உட னடியாக வெளியேறுகின்றது.
இந்த வகை இரத்தப்போக்கு அதிகம் உள்ள நாட்களி ல் காணப்படும். மேலும் இது கருப்பையில் அதிக நேரம் தங்கி கருப்பு நிறத்தை அடையாமல் உடனடி யாக வெளியேறி விடுகின்றது.
இளஞ்சிவப்பு அல்லது குருதி நெல்லி நிறம் ஆரோக்கிய மான மாதவிடாய் சுழற்சியைக் குறிக்கும். இந்த நிறம் பொதுவாக மாதவிடாய்தொடங்கி 2வது நாள் காணப்ப டுகிறது. காலப்போக்கில், இக்குருதி நெல்லிநிற உதிரம் ஆழ்ந்த சிவப்பு நிறத்திற்கு மாறி விடும். இது மிகவும் சாதாரண விஷயமாகும்.
கருப்பு அல்லது பழுப்பு நிற வண்ணம் மிகவும் ஆபத் தானது. உங்களுடைய மாதவிடாய் கால உதிரத்தின் நிறம் இவ்வாறு இருந்தால் தயவுசெய்து அலட்சியம் செய்துவிடாதீர்கள். பழுப்பு அல்லது கருப்புநிற இரத்த ம் கருச்சிதைவு அல்லது கருப்பையில் ஏற்பட்டுள்ள தொற்றைக் குறிக்கிறது.
எனினும், மாதவிடாய்தொடங்கி 4வது நாளில் கருப்பு நிற உதிரத்துடன் சில சிவப்புநிற திட்டுக்களை நீங்கள் காணநேரிட்டால் கவலைவேண்டாம். ஏனெனில் அது உறைந்த உதிரத்தைக் குறிக்கின்றது. ஆகவே இதைப் பற்றி கவலை கொள்ள வேண்டாம்.