Home சூடான செய்திகள் `அந்த’ ஜோடிகளிடம் `அது’ அதிகம்!!

`அந்த’ ஜோடிகளிடம் `அது’ அதிகம்!!

24

03ஜோடிகளின் உறவு முறைக்கு ஏற்பவே உடல் உறவின் எண்ணிக்கை அமைகிறது என்கிறது ஓர் ஆய்வு.

அந்த விவரம்-

திருமணம் செய்யாமல் `சேர்ந்து வாழும்’ (`லிவ்-இன் ரிலேசன்ஷிப்’) தம்பதிகள் வருடத்துக்கு 146 முறை உறவுகொள்கிறார்கள்.

திருமணமான தம்பதிகள் வருடத்துக்கு 98 முறை உறவுகொள்கிறார்கள்.

திருமணத்துக்கு முன்பே சில ஆண்களும், பெண்களும் வருடத்துக்குச் சராசரியாக 49 முறை உறவு கொள்கிறார்கள்.

இந்த ஆய்வு முடிவு குறித்து நிபுணர்களின் கருத்து:

டாக்டர் ராஜன் பி. போன்ஸ்லே (பாலியல் மருத்துவ ஆலோசகர்)

`லிவ்-இன் ரிலேசன்ஷிப்பில் ஈடுபடுபவர்கள் பெரும்பாலும் இளவயதினராகவே இருப்பார் கள். அங்கே ஒரு புத்தம்புதுவான உணர்வும், பெரிய அளவிலான ஈர்ப்பும் இருக்கும். `லிவ்-இன் ரிலேசன்ஷிப்’ பெரும்பாலும் குறுகிய காலத்துக்கே நீடிப்பதால் உறவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்தத் தம்பதிகள் தனியாகவே வசிப்பார்கள். எனவே தனிமை ஒரு பிரச்சினையல்ல. அதனால் திருமண வாழ்க்கையை விட இங்கு அடிக்கடி உறவுகள் நிகழ்கின்றன. திருமணத் தம்பதிகளுக்கும் கூட ஆரம்ப ஆண்டுகளில் உறவுகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். பின்னர் அது வழக்கமான கடமையாகி, பரஸ்பரம் உரிமை எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பிக்கிறார்கள். புதிதாகத் திருமணமான ஒரு ஜோடி முதலாம் ஆண்டில் வாரத்துக்கு 4 அல்லது 5 முறை உறவு கொள்கிறது. அதுவே இரண்டாம் ஆண்டில் 2 அல்லது 3 முறை என்றாகிவிடுகிறது. வருடங்கள் கடக்கக் கடக்க அது வாரத்துக்கு ஒருமுறை மட்டுமே என்ற நிலையை எட்டிவிடுகிறது.

திருமணத்துக்கு முன்பு தனிநபர்கள் ஓராண்டில் 49 முறை உறவு கொள்கிறார்கள் என்பது அதிகபட்சமான எண்ணிக்கையாக இருக்கக்கூடும். நகர்ப்புறங்களில், வாய்ப்புகள், பொருளாதார வசதி காரணமாக அதிக செக்ஸுக்கு இடமிருக்கிறது. ஆனால் சிறு நகரங்கள், கிராமப்புறங்களில் அது குறைவாகவே இருக்கும்.

டாக்டர் அஞ்சலி சாப்ரியா (மனோவியல் நிபுணர்)

தனிநபர்கள், திருமணத் தம்பதிகளைவிட `லிவ்-இன்’ ஜோடிகள் அதிக உறவு வைத்துக் கொள்கிறார்கள் என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன். எனக்குத் தெரிந்து திருமணத் தம்பதிசூகள் வருடத்துக்கு 72 முறை உறவுகொள்கிறார்கள். அதாவது, மாதத்துக்கு 6 முறை. ஆனால் ஆண்டுக்கு 98 முறை என்பது மிகைப்படுத்தப்பட்டதாகத் தோன்றுகிறது. திருமண வாழ்க்கையில் நிறையப் பொறுப்புகள் இருக்கின்றன. வீட்டு வேலைகள், குழந்தைகள், குடும்பத்தைக் கவனிப்பது… இப்படி. பொதுவாக பணிபுரியும் தம்பதிகள், டி.வி. பார்ப்பது, மற்றவர்களுடன் கலந்து பழகுவது ஆகியவற்றின் மூலம் தங்களை `ரிலாக்ஸ்’ செய்துகொள்ள முனைகிறார்கள்.

`லிவ்-இன்’ ஜோடிகளிடம், திருமணமாகாமல் சேர்ந்து வாழும் கவர்ச்சி இருக்கிறது. அதுவே செக்ஸ் ரீதியான செயல்பாட்டை ஊக்குவிக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அங்கே ஓர் உத்தரவாதமான நீண்டகாலப் பொறுப்பு இல்லை. அது நெருக்கடியைப் போக்கு கிறது. பொறுப்பு குறையும்போது எளிதாக உடல்ரீதியாகச் சேர்ந்துவிட முடிகிறது.

தனிநபர்களுக்கு உணர்வுரீதியான பிரச்சினை இல்லை. ஒரு இரவில் கூட கூடிப் பிரிந்து விட முடிகிறது. அவர்களுக்குப் பொறுப்பு, கடமை இல்லை. ஆனால் வாய்ப்புகள் குறைவு. எனவே வருடத்துக்கு 49 முறை உறவு என்பது துல்லியமாகத் தெரிகிறது.

சாவி கன்னா கோஸ்வாமி (மனோதத்துவ நிபுணர்)

நான் சந்தித்த தம்பதிகள், ஆராய்ச்சி ஆதாரங்கள் அடிப்படையில் இந்தப் புள்ளிவிவரம் சரியாகவே இருக்கிறது என்பேன். `லிவ்-இன்’ ஜோடிகளுக்கு ஓர் ஏற்பாட்டின் அடிப் படையில் தொடர்பு, நெருக்கம் இருக்கிறது. ஆனால் திருமணம் என்பது இருநபர் களுக்கு இடையிலான தொடர்பு மட்டுமல்ல, அது ஒரு அமைப்பும் கூட. எளிமையாகச் சொல்ல வேண்டுமென்றால், திருமணமான தம்பதிகள் செக்ஸ் இல்லாமல் கூட குடும்ப அமைப்பில் நீடிக்கலாம். ஆனால் `லிவ்-இன்’ ஜோடிகள் அப்படியிருக்க வாய்ப்பில்லை. அப்படியென்றால் அவர்கள் ரூம் மேட்கள் போலத்தான். இரண்டாவதாக, வீட்டில் வேறு நபர்கள் இருப்பது உறவுகளின் எண்ணிக்கையைப் பாதிக்கிறது. பெரும்பாலான இந்தியத் தம்பதிகள், பெற்றோர் அல்லது பிறர் முன்னிலையில் தங்களின் பாலியல்ரீதியான, உணர்வுரீதியான நெருக்கத்தை வெளிப்படுத்தக் கூச்சப்படுகிறார்கள்.