Home பெண்கள் பெண்குறி அந்தரங்க உறுப்பைச் சுற்றியுள்ள கருமையை நீக்க இதை பின்பற்றுங்கள்!

அந்தரங்க உறுப்பைச் சுற்றியுள்ள கருமையை நீக்க இதை பின்பற்றுங்கள்!

57

inner-thighs-14-1476420634உடலில் குறிப்பிட்ட பகுதி மட்டும் கருமையாக இருக்கும். இதற்கு அப்பகுதியில் அதிகம் காற்றோட்டம் இல்லாமல் வியர்வை வெளியேறுவதால், இறந்த செல்கள் அவ்விடத்தில் எளிதில் நீக்க முடியாதவாறு தேங்கி, கருமையாகின்றன.

உடலிலேயே அந்தரங்க பகுதி தான் மிகவும் சென்சிடிவ்வானது. இப்பகுதியில் கெமிக்கல் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்தினால், அதனால் பக்கவிளைவுகள் ஏற்படும் வாய்ப்புள்ளது. எனவே இப்பகுதியில் க்ரீம்களுக்கு பதிலாக, இயற்கைப் பொருட்களைக் கொண்டு பராமரித்து வந்தால், அப்பகுதியில் எந்த ஒரு பக்கவிளைவும் இல்லாமல் கருமை நீங்கும்.

எலுமிச்சை சாறு:

2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாற்றுடன், 10 துளிகள் ரோஸ் வாட்டரை சேர்த்து கலந்து, காட்டன் பயன்படுத்தி தடவி, 3-5 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி தினமும் மூன்று முறை இச்செயலை செய்து வந்தால், விரைவில் நல்ல பலன் கிடைக்கும். முக்கியமாக இச்செயலுக்குப் பின் தேங்காய் எண்ணெயைத் தடவினால், அப்பகுதியில் அரிப்பு, எரிச்சல் ஏற்படுவது தடுக்கப்படும்.

கற்றாழை:

1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 30 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் நீரில் நனைத்த பஞ்சுருண்டையைக் கொண்டு துடைத்து எடுக்க வேண்டும். இந்த முறையையும் மூன்று முறை செய்து வர, சீக்கிரம் கருமை நீங்கும்.

அரிசி மாவு:

1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவு, 1 டேபிள் ஸ்பூன் மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் தயிர் மற்றும் 1/2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலந்து, வேண்டுமானால் அதோடு சிறிது ரோஸ் வாட்டர் சேர்த்துக் கொள்ளலாம். பின் அந்த கலவையை கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 20 நிமிடம் கழித்து, பின் குளிர்ந்த நீர் பயன்படுத்தி தேய்த்து கழுவ வேண்டும்.

சந்தனம் மற்றும் ஆரஞ்சு:

1 டேபிள் ஸ்பூன் சந்தனப் பொடியுடன் 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு தோல் பொடியை சேர்த்து, ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து கொண்டு, அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி 20 நிமிடம் கழித்து கழுவ வேண்டும்.

தயிர்:

தினமும் தயிரைப் பயன்படுத்தி அந்தரங்க பகுதியைச் சுற்றி 5 நிமிடம் மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு காலை, மாலை என இரு வேளை செய்து வர, நல்ல பலன் கிடைக்கும்.

முட்டை வெள்ளைக்கரு:

1 முட்டையின் வெள்ளைக்கருவை மென்மையாக அடித்துக் கொண்டு, கருமையாக இருக்கும் அந்தரங்க பகுதியைச் சுற்றி தடவி, நன்கு காய்ந்த பின் ஈரமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.

தேங்காய் எண்ணெய்:

அந்தரங்க பகுதியில் உள்ள முடியை நீக்கிய பின், பால் பயன்படுத்தி அந்த இடத்தை துடைத்து எடுத்துவிட்டு, தேங்காய் எண்ணெயைத் தடவி வர வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், அந்தரங்க பகுதியில் உள்ள கருமையைப் போக்கலாம்.