Home பெண்கள் பெண்குறி அந்தரங்க ஆரோக்யத்தை பாதுகாப்பது எப்படி

அந்தரங்க ஆரோக்யத்தை பாதுகாப்பது எப்படி

23

download (3)அந்தரங்க பகுதியில் வளரும் முடியை ஷேவிங் செய்த பின்னர் கடுமையான அரிப்பு பலரும் சந்திப்போம். அப்படி பொது இடங்களில் எல்லாம் அரிப்பு ஏற்படும் போது பலரும் மிகுந்த சங்கடத்திற்கு உள்ளாவோம்.

பொதுவாக அக்குள் மற்றும் கால்களில் உள்ள முடியை ஷேவிங் செய்வதென்பது வேறு, அந்தரங்க பகுதியில் உள்ள முடியை ஷேவிங் செய்வதென்பது வேறு.

எப்படியெனில் அந்தரங்க பகுதியில் உள்ள முடி கடினமாக இருப்பதோடு, அப்பகுதியில் உள்ள சருமமானது மிகவும் மென்மையானது. எனவே அப்பகுதியில் ரேசரைப் பயன்படுத்தும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும்.

இங்கு அந்தரங்க பகுதியில் வளரும் முடியை ஷேவிங் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டியவையும், ஷேவிங் செய்த பின் செய்ய வேண்டியவையும் கொடுக்கப்பட்டுள்ளது.

வழிமுறை: 1
அந்தரங்க இடத்தில் ஷேவிங் செய்யும் முன், அவ்விடத்தில் உள்ள முடியை ட்ரிம் செய்து கொள்வது நல்லது. இதனால் ஷேவிங் செய்யும் போது, ரேசரில் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கலாம். இதன் மூலம் ஷேவிங் செய்யும் போது, ஆங்காங்கு முடி நிற்பதைத் தடுக்கலாம்.

வழிமுறை: 2
வெதுவெதுப்பான நீரில் குளியல் மேற்கொள்வது நல்லது. இதனால் அந்தரங்க பகுதியில் உள்ள முடி மென்மையாகி, ஷேவிங் செய்யும் போது முடி எளிதில் வந்துவிடும்.

வழிமுறை: 3
அடுத்து அவ்விடத்தை மசாஜ் செய்து, மென்மையான பாடி பிரஷ் கொண்டு சீவினால், அப்பகுதியில் உள்ள முடி தளர்ந்துவிடும்.

வழிமுறை: 4
கெட்டியான ஷேவிங் க்ரீம்மை தடவுங்கள். அதே சமயம் அப்படி பயன்படுத்தும் ஷேவிங் க்ரீம் மிகுந்த நறுமணத்துடன் இல்லாதவாறு இருக்க வேண்டும். ஏனெனில் நறுமணமிக்க க்ரீம்கள் எரிச்சலையும், அரிப்பையும் ஏற்படுத்தும். மேலும் ஷேவிங் க்ரீம் தடவிய பின் சில நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

வழிமுறை: 5
முக்கியமாக அந்தரங்க பகுதியை ஷேவிங் செய்யும் போது, ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று வடிவமைக்கப்பட்ட ரேசரை வாங்கிப் பயன்படுத்துங்கள். இதனால் எவ்வித காயங்களும் ஏற்படாமல் முடியை நீக்கலாம்.

வழிமுறை: 6
முக்கியமாக ஷேவிங் செய்யும் போது, அவ்விடத்தை வளைவு நெளிவுகள் இல்லாதவாறு இழுத்து பிடித்தவாறு ஷேவிங் செய்ய வேண்டும்.

வழிமுறை: 7
ஷேவிங் செய்து முடித்த பின், அவ்விடத்தை நன்கு உலர வைக்க வேண்டும். மேலும் அந்த இடத்தை எக்காரணம் கொண்டும் துணியால் தேய்க்கக்கூடாது. அதுமட்டுமின்றி ஷேவிங் செய்த பின் கற்றாழை ஜெல் கொண்டு மசாஜ் செய்தால், அப்பகுதியானது குளிர்ச்சியடைந்து, எரிச்சல் மற்றும் அரிப்பை தடுத்துவிடும்.