Home சூடான செய்திகள் அடுத்த படத்துக்கு தயாராகும் ஐஸ்வர்யா – ஹீரோ தனுஷ் இல்லை!

அடுத்த படத்துக்கு தயாராகும் ஐஸ்வர்யா – ஹீரோ தனுஷ் இல்லை!

31

கொலைவெறி புகழ் 3 படத்தையடுத்து, புதிய படத்தை இயக்கும் பணிகளில் மும்முரமாக உள்ளார் ஐஸ்வர்யா.

இந்தப் படம் முழுக்க முழுக்க கலகலப்பான காதல் நகைச்சுவைப் படமாக அமையும் எனத் தெரிகிறது.

ரஜினிகாந்தின் முதல் மகள் ஐஸ்வர்யா தனுஷ் தனது முதல் படம் 3 ஐ சமீபத்தில் வெளியிட்டார்.

தனுஷின் ஒரே மாதிரி பாத்திரத் தேர்வு மற்றும் நெகடிவான விமர்சனங்கள் காரணமாக படம் சுமாராகத்தான் போவதாக பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

இந்த நிலையில், அடுத்த படத்தை எடுக்க தயாராகிவிட்டார் ஐஸ்வர்யா. ஆனால் இந்த புதிய படத்தில் தனுஷ் நடிக்கவில்லை.

“எனது அடுத்த படத்தை எடுக்க நான் காத்திருக்க விரும்பவில்லை. சும்மாவே உட்கார்ந்திருக்க எனக்குப் பிடிக்கவில்லை. பணியாற்றுவது எனக்குப் பிடித்துள்ளது. என் தாயாரும் மாமியாரும் குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதால், இயக்குநராகப் பணியாற்றுவது சுலபமாக உள்ளது,” என்கிறார் ஐஸ்வர்யா.