Home ஆரோக்கியம் பொது மருத்துவம் அடிக்கடி மூக்கு ஒழுகுதா?… இனி ஒழுதா மொதல்ல இத பண்ணிடுங்க… உடனே சரியாகிடும்..

அடிக்கடி மூக்கு ஒழுகுதா?… இனி ஒழுதா மொதல்ல இத பண்ணிடுங்க… உடனே சரியாகிடும்..

33

விக்கல், தும்மல், மூக்கு ஒழுகுதல் போன்ற சின்ன சின்ன பிரச்னைகள் தான் நம்மை பெரிய அளவில் எரிச்சலடைய வைக்கும். பொது இடங்களில் நாம் மற்றவர்களுடன் இருக்கும்போது இதுபோன்ற பிரச்னைகள் வந்தால், சொல்லவே தேவையில்லை.

அப்படிப்பட்ட பிரச்னைகளை எப்படி சமாளிப்பது?…

விக்கல்

அடிக்கடி விக்கல் ஒரு 30 வினாடிகள் இரண்டு காது துவாரங்களையும்
விரல்களால் அடைத்துக் கொள்ளுங்கள். தீராத விக்கலும் உடனே நின்று போகும்.

அதேபோல், ஒரே ஒரு சிறு கரண்டி அளவுக்கு சர்க்கரையை வாயில் போட்டு சுவையுங்கள். பறந்து போகும் விக்கல்.

கொட்டாவி

கொட்டாவி வருவதற்கான காரணம்
Oxygen பற்றாக்குறை தான்… அதனால் ஒரு நான்கு அல்லது ஐந்து தடவை, நன்கு மூச்சை இழுத்து விடுங்கள்… கொட்டாவி போய், நன்கு சுறுசுறுப்பாகிவிடுவீர்கள்

உடல் துர்நாற்றம்

உடல் துர் நாற்றத்தைப்போக்க குளிக்கும் போது நீங்கள் குளிக்கும் தண்ணீரில் ஒரே ஒரு தக்காளிப் பழத்தின் சாற்றினை சில சொட்டுகள் கலந்து பிறகு குளிக்கவும்… அவ்வளவு தான்… நாள் முழுக்க புத்துணர்வுடன் திகழ்வீர்கள்!

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றத்தால் சங்கடமா?

எலுமிச்சை சாற்றில் சிறிது உப்பு சேர்த்து குடித்து வந்தாலும், வாயைக் கொப்பளித்து வந்தாலும் வாய் துர் நாற்றம் நீங்கும்.

ஆனால் வாய் துர் நாற்றத்திற்கு காரணம் நம் வயிறு சரி இல்லை என்பதை உணருங்கள்.உங்கள் பல்லில் பிரச்சனைகள் இருந்தாலும் வாய் துர் நாற்றம் ஏற்படும்.

தலைமுடி வயிற்றுக்குள் போய் விட்டதா?

வாழைப் பழத்தினுள் அல்லது வெற்றிலையில் ஒரு நெல்லை வைத்து விழுங்க,முடி வெளியேறி பேதியும் நிற்கும்.

வேனல் கட்டி தொல்லையா?

வெள்ளைப் பூண்டை நசுக்கி சிறிது சுண்ணாம்பு கலந்து கட்டி மீது தடவி வர அது உடையும்.

தலை முடி உதிர்வதைத் தடுக்கும் வழி முறைகள்

முடி கொட்டிய இடத்தில் ஐஸ் கட்டியைத் தடவினால் முடி வளரும்.
கச கசாவை பாலில் ஊர வைத்து, அரைத்து அத்துடன் பாசிபருப்பு மாவை கலந்து தேய்த்து வர முடி உதிர்தல் நிற்கும்.

நன்கு வளர கற்றாழை சாறில் தேங்காய் எண்ணெய் கலந்து தேய்த்தால் முடி உதிராது. அடர்த்தியாகும். நன்றாக வளரும். அத்துடன் தலையும் குளிர்ச்சியாகும்.

சிறிய வெங்காயத்தின் சாறை எடுத்து தலையில் தேய்த்து ஊற வைத்து குளித்தால் முடி உதிராது.

செம்பருத்தி பூவுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்தால் முடி உதிராது. அத்துடன் கூந்தல் கருமையாகவும் மாறும்.

முட்டை வெள்ளை கருவை தலையில் தேய்த்து 10 நிமிடம் கழித்து சீகைகாய் போட்டுக் குளித்தால் தலை முடி உதிர்வது சுத்தமாக நின்று விடும்.

வாரம் ஒரு முறை முடக்கத்தான் கீரையை அரைத்து தலையில் தேய்த்து 5 நிமிடம் ஊறியதும் குளிக்கவும். இது போல் தொடர்ந்து மூன்று மாத காலம் குளித்துப் பார்க்கவும். முடி கொட்டுவது நின்று விடும் அதுமட்டும் அல்ல இந்த கீரை நரை விழுவதைத் தடுக்கும். கருகருவென முடி வளரத் தொடங்கும்.

மூக்கு அடைப்பு, இருமல், சளி நீங்க…

மூன்று ஏலக்காயை பொடியாக்கி நெய்யை பொடி மூழ்கும் அளவு ஊற்றி அடுப்பில் காய்ச்சவும். பிறகு கலக்கி வடி கட்டி எடுத்து இரண்டு சொட்டுகள் படுத்தவாறு மூக்கில் விட்டு கொண்டால் மூக்கடைப்பு நீங்கும்.

நான்கு வெற்றிலை, மூன்று மிளகு ஆகியவற்றை மென்று விழுங்கினால் நீர்க்கோவை, தலைபாரம் ஆகியவை குணமாகும்.

சதா மூக்கு ஒழுகி கொண்டே இருந்தால் ஜாதிக்காயை தண்ணீர் விட்டு உரசி அதை சூடேற்றி மூக்கு, நெற்றி மீது பூசினால் மூக்கு ஒழுகுவது நிற்கும்.

சுக்கை தட்டி அதை கஷாயமாக போட்டு அதை தேனுடன் கலந்து சாப்பிட்டால் ஜலதோஷம் போய் விடும்.

புளியமரப்பூ, உப்பு, மிளகாய், தேங்காய் இவற்றை சேர்த்து அரைத்தால் புளியமரப்பூ சட்னி ரெடி; ருசியானது. இட்லிக்கு தொட்டு கொண்டால் சுவையாக இருக்கும். இருமலை போக்கும்.